16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துள்ளார் தினகரன்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு..

By 
vana1

ராமபிரான் பதினாறு ஆண்டுகள் வனவாசம் செய்தது போல்,  டிடிவி தினகரன் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தேனியில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்துள்ளார். 

தேனியில் பாஜக கூட்டணியை கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் என்பதும் இவர்கள் இருவருக்கு தான் சரியான போட்டி என்றும் கூறப்பட்டு வருகிறது. 

இப்போதைய நிலைமைப்படி யாருக்கு வெற்றி என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்றும் இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தேனியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது ’ஸ்ரீராமரை போல 16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக்கொண்டு தினகரன் இந்த தேர்தலில் களம் காண்கிறார் என்றும் ஜெயலலிதாவை போலவே டிடிவி தினகரன் அரசியல் செய்கிறார் என்றும் பேசினார் 

பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி தேனியில் பிரச்சாரம் செய்தது அதிமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Share this story