திமுக ஒரு குடும்பக் கட்சி, அதிமுக ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி: திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் பிரச்சாரம்.. 

By 
pca2

அனலாய் தெறிக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் பரபரப்பான சூழலில், அஇஅதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வாக்குச் சேகரிக்கும் பணியில் பரப்புரை மேற்கொண்டார் திரைப்பட இயக்குனரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன். அவர் பரப்புரையில் பேசுகையில்,

புரட்சித்தலைவி அம்மா வழங்கிய நலத்திட்டங்கள் ஏராளம். தாலிக்குத் தங்கம், என்றும் அழிக்க முடியாத அம்மா உணவகம், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள், கல்வி மேம்பட லேப் டாப், பெண்களுக்கு சம உரிமை'  என பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

திமுக ஒரு குடும்பக் கட்சி, அதிமுக ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி. நல்லவர் லட்சியம்; வெல்வது நிச்சயம்.! எனவும் சூளுரைத்து வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து, சேலம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி. விக்னேஷ்க்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து, திரைப்பட இயக்குனரும், நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் அன்பழகன்,ஆர்.மணி எம்.எல்.ஏ, ஆகியோர் சேலம் தீ வட்டி பட்டியில்  வாக்கு சேகரித்தனர்.

மேலும், கன்னியாகுமரியில் அ.தி.மு.க வேட்பாளர் பசலியானை ஆதரித்த பரப்புரையில் நட்சத்திர பேச்சாளர்களான திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், நடிகர் சிங்கமுத்து, நடிகை காயத்ரி ரகுராம், முன்னாள் அமைச்சர்கள் பச்சைமால், தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
 

Share this story