கச்சத்தீவு விவகாரத்திற்காக, திமுக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை விளாசல்...

By 
amalai16

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. இதனை வெளிவரவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கையாகவே வைத்துள்ளோம். குறிப்பாக தமிழக மீனவர்கள் கட்சத்தீவிற்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

எனவே, கச்சத்தீவு விவகாரத்திற்காக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்காக உள்ள அனைத்து சாத்தியங்களையும் மத்திய அரசும் வெளிஉறவுத்துறை அமைச்சகமும் ஆராய்ந்து வருகிறது. 

பிரதமர் மோடி இதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். கண்டிப்பாக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.தேர்தல் சமயத்தில் இந்த விவகாரத்தை நாங்கள் எடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சில நாட்களுக்கு முன்பு தான் இந்த ஆவணங்கள் கிடைத்தது. எனவே தற்போது இதை மக்கள் முன் வைத்துள்ளோம்.மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் தொடர்ந்து பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஜல்ஜீவன் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான மானியம், ரயில்வே விரிவாக்கம், விமான நிலைய கட்டமைப்பு, புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவர் பேசுவதில்லை.

10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழகத்திற்கு முத்ரா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூர் சிறப்பாக பலனடைந்துள்ளது. கோயம்புத்தூரை பொறுத்தவரை தேவையில்லாத இடங்களில், விஞ்ஞானபூர்வமில்லாத பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து சென்னைக்கும் பெங்களூருக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை மேலும் அதிகரிக்கப்படும். புதிதாக ரயில் சேவை இட நெருக்கடி காரணமாக கோவை ரயில் சந்திப்பு நிலையத்திற்கு வழங்க முடியவில்லை. 

அதற்காகவே, அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்தோடு பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை." என தெரிவித்தார்.

Share this story