திமுக ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காது: ஆளுநர் மாளிகையில் குண்டுவீச்சு குறித்து அமைச்சர் உதயநிதி..

By 
hurled

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூட்ட அரங்கில் துறை சார்ந்த அதிகாரியுடன்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், திட்ட அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் சில திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சில திட்டங்களில் தொய்வு உள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் அதனை சரி செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. திமுக தான் செயல்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி அரசியல் காரணத்திற்காக தெரிவித்த விமர்சனத்திற்கு தலைவர் ஸ்டாலின் உரிய பதில் கொடுத்துள்ளார். முல்லைப் பெரியாறு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கேட்க வேண்டும். தமிழ்நாடு மாநில உரிமையை என்றும் விட்டுக் கொடுக்காது.

எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுகொள்ளாது. நீட்டை அரசியல் ஆக்க வேண்டாம். இது திமுகவி பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்சினை. 22 மாணவர்கள் எந்த வித இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மாணவர்கள். அனைவரும் சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நீட் விளக்கு ஏற்பட்டால் ஒட்டுமொத்த பெருமையையும் அதிமுக கூட எடுத்துக் கொள்ளட்டும். எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு தடை செய்யப்பட வேண்டும். 

சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தி வருகிறோம். எங்களுடைய செயல்பாட்டை பார்த்து இந்த ஆண்டு கேந்திர வித்யாலயா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் நடத்துவதற்கு அறிவித்துள்ளனர். தொடர்ந்து பல சர்வதேசப் போட்டிகளையும் நடத்துவோம் என்றார்.

Share this story