திமுகவின் அராஜகப்போக்கு விரைவில் முடிவுக்கு வரும்: அமமுக கண்டனம்..

By 
ammk

எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவது; ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிக் கைது செய்தனர். சுமார் 500 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே சென்னை டிபிஐ வளாகத்தில் சம ஊதியம் வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது தொடர்பாக அமமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கே.எஸ்.கோனேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

சென்னை தேனாம்பேட்டை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய செவிலியர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தன் தேர்தல் வாக்குறுதி 356 இல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்திருந்தது.

திமுக, தற்போது தான் கொடுத்த வாக்குறுதிகளையும் மக்கள் பணிகளையும் மறந்துவிட்டு. அதிமுக உடைந்திருப்பதே தன் பலம்.. மக்களுக்கு நாம் எதையும் செய்ய தேவையில்லை என்ற மனப்பான்மையோடு ஆட்சி செய்வதே அவர்களின் வாடிக்கையாகி விட்டது. 

வெகுவிரைவில் காட்சிகள் மாறும். அப்போது அதற்கான தண்டனையை மக்கள் திமுகவிற்கு கொடுப்பார்கள். தொண்டர்கள் எல்லாம் ஒன்றிணைந்து மக்கள் செல்வர் டிடிவி தினகரன் போன்றவரை தலைமை ஆக்கினால் தான் திமுகவின் இதுபோன்ற அராஜக போக்கு முடிவுக்கு வரும் என்பது உண்மை' என தெரிவித்துள்ளார்.

Share this story