"பிடிப்பதா வலையை மடிப்பதா?" என மலைக்கிறது திமுக : மருது அழகுராஜ் விளாசல்

By 
marudhu194

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

* இந்திய தேசத்தின் இரும்பு மங்கை புரட்சித்தலைவி அம்மா வசித்த கொடநாடு பங்களாவுக்குள், கால் வைத்து கொலை கொள்ளை நடத்திட காரணமானவர்கள்..

சாதாரண மனிதர்களாக இருந்திருந்தால், இந்நேரம் அவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத் தந்து, அதன் வழியிலான அரசியல் ஆதாயத்தையும்..

கூடவே..அம்மாவை உயிராக நேசிக்கிற கழகத் தொண்டர்களின் அபிமானத்தையும்.. தி.மு.க. ஆட்சி அறுவடை செய்திருக்கும்.

ஆனால், வலைக்கு மீறிய திமிங்கலங்கள் என்றால்..பிடிப்பதா பேசாமல் வலையை மடிப்பதா என மலைக்கத்தானே வேண்டும்.

* அம்மா.. நீங்கள் கவனத்தோடு செதுக்கிய கழகம் எனும் அழகுச்சிற்பம்.. இன்று, எடப்பாடி எனும் ஜல்லி உடைக்கும் எந்திரத்தின் பிடியில் என்றால்...

இந்த அபாயத்தில் இருந்து கழகத்தை மீட்பது, அம்மா நீங்கள் அடையாளம் காட்டிய கழகத்து பரதனின் உரிமை அன்றோ..

அவரது காலடித் தடத்தின் பின் செல்வது கழகமே உலகமென வாழும் கழகத் தொண்டர்களின் கடமை அன்றோ..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story