அவர் சொல்வதையெல்லாம் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
 

By 
ops222

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக அறிவித்து ரத்தான புரட்சி பயணம் விரைவில் தொடங்க உள்ளது. சனாதனம் பற்றிய பிரச்சனைக்கு ஏற்கனவே முழுமையான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இறையாமையை போற்றும் ஒரே கட்சி தி.மு.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் சொல்வதையெல்லாம் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

எடப்பாடி தலைமையில் இன்று நடைபெறுவது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல். இந்தியாவை பாரத் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. முறையாக அறிவிக்கப்பட்ட பின்னர் அறிக்கை விடுவோம். இவ்வாறு அவர் கூறினார். 


 

Share this story