துரை வைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது : மதிமுக. அவைத் தலைவர் பேச்சு

duraiv

திருப்பூர் துரைசாமியின் கடிதத்துக்கு, துரை வைகோ பதில் அளித்தார். அதில், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். 

இதற்கிடையில், திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவரிடம் துரை வைகோவின் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:-

'துரை வைகோ சின்ன பையன். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. வைகோ பதில் சொன்னால், பதில் சொல்லலாம். அவர் குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல், மற்றவர்களின் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை' என்றார்.

Share this story