பாஜக எம்எல்ஏ மருமகனை தூக்கிய எடப்பாடி பழனிச்சாமி.. கொங்கு மண்டலத்தில் திடீர் ட்விஸ்ட்..

By 
arral

பாஜக மாநில ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோருக்கான) அணியின் துணை தலைவராக, ஆற்றல் அசோக்குமார் பதவி வகித்து வந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சவுந்தரத்தின் மகனான அசோக்குமார், தற்போதைய மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார்.

பாஜக- அதிமுக கூட்டணி இருந்த நிலையில் ஈரோடு லோக்சபா தொகுதியை மருமகன் அசோக்குமாருக்கு பெற்றுத் தர வேண்டும் என்பதில் எம்.எல்.ஏ. சரஸ்வதி முயற்சித்து வந்தார் என்று அப்போது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகன் அசோக்குமார், பாஜகவில் ஓபிசி அணி துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் இவர் அக்கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். 

சென்னை பசுமைவழிச் சாலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணி துணை தலைவர் ஆற்றல் அசோக்குமார் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

Share this story