எடப்பாடி சூழ்ச்சியும்..பாஜக வீழ்ச்சியும் : மருது அழகுராஜ் தெளிவுரை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
காங்கிரசுடனான கூட்டணிக்கு தனது முன்னாள் அரசியல் வியூக வகுப்பாளர் சுனில் மூலமாக பெருமுயற்சி எடுத்த எடப்பாடியின் திட்டத்தை..
வேலுமணி, தங்கமணி போன்ற ஷிண்டேக்களை வைத்து தடுத்து..எடப்பாடியை பா.ஜ.க. தன்வசப்படுத்தி விட்டாலும்..
எடப்பாடியோ தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க. வுக்கு ஒரு சீட்டுக்கூட கிடைக்காதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற உத்தரவாதத்தை காங்கிசுக்கு கொடுத்திருக்கிறாராம்.
ஆம்..2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும்.. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் இருந்தபோதே.. ஒரே ஒரு தொகுதியில் தேனியில் மட்டும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில்..
இப்போது ஓ.பி.எஸ்ஸே தனி அணியாகி விட்ட நிலையில், அவரை பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்கிற பிடிவாதத்தின் மூலம், பா.ஜ.க. வுக்கு தமிழகத்தில் இருந்து பூஜ்யத்தை மட்டுமே பரிசாக தர வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டமாம்.
மேலும், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருக்கும் எடப்பாடி.. காங்கிரஸ் கட்சிக்கு சுனில் மூலமாக கனத்த தொகையையும் நன்கொடையாகவும் தந்திருக்கிறாராம்.
இவையாவுக்கும் மேலாக, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு உதவுவதன் மூலம், தன் மீதான கொலை கொள்ளை மற்றும் ஊழல் வழக்குகளில் தி.மு.க. கரிசனம் காட்ட வேண்டும் என்பதுதான் எடப்பாடி தி.மு.க. வுடன் போட்டிருக்கும் ஒப்பந்தமாம்.
ஆக, அதிமுக என்கிற இயக்கத்தை பதுங்கு குழியாக பயன்படுத்திக்கொண்டு பா.ஜ.க. வுக்கும் ஆப்படிப்பது.. கூடவே எதிர்காலத்தில் மத்தியில் அமையப்போவதாக அவர் நம்புகிற காங்கிரஸ் ஆட்சியிடமிருந்தும் மாநிலத்தில் தி.மு.க. விடம் இருந்தும்
தம்மையும் தன் சம்பந்தி மற்றும் ஊழல் சகாக்களையும் காப்பாற்றிக் கொள்ளவதும்தான் எடப்பாடி வகுத்திருக்கும் பாதாளத் திட்டம்.
ஆனாலும்.. தந்திரத்தாலே பிழைப்பவனை காலம் ஒரு நாள் அந்தரத்தில் நிறுத்தாமல் போகாது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.