எடப்பாடியின் துப்புக்கெட்ட கும்பல் : ஓபிஎஸ் தரப்பு விளாசல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
'தன் பேரப்பிள்ளைகளோடு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் டி.டுவென்டி மேட்ச் பார்க்க வந்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் என்பதை அறிந்து..
அங்கே இருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மரியாதை நிமித்தமாக ஓ.பி.எஸ்ஸை சந்தித்து வணக்கம் செலுத்தியதை நாகரீகமற்ற எடப்பாடி தரப்பும், குறிப்பாக சாக்கடை அரசியல்வாதியான மெயின்ரோட்டு குமாரும் விமர்சிப்பது அவர்களது கீழ்த் தரத்தையே காட்டுகிறது.
நத்தம் விஸ்வநாதன் கல்லூரியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டி.என் பி.எல் மேட்ச் நடந்தபோது மு.க.அழகிரி அங்கே குடும்பத்துடன் வந்து மேட்ச் பார்த்து சென்றது நினைவிருக்கா.. இது அம்மா உயிரோடு இருந்தபோதே நடந்தது.
ஆக, ரகசிய சந்திப்புகளை லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் கிரிக்கெட் கேலரியில் நடத்த வேண்டியதில்லை. மேலும், அப்படிப்பட்ட சந்திப்புகளின் புகைப்படத்தை வெளியிடத் தேவையும் இல்லையே..
எனவே, எடப்பாடியின் கூமுட்டை கும்பல்.. இதுபோன்ற சந்திப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்வதையும், அவதூறு பரப்புவதையும் விட்டுவிட்டு. கொடநாடு கொலை கொள்ளை குற்றத்தில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, எடப்பாடியின் எடுப்பு சேலம் இளங்கோவன் சந்தித்து பேசியது குறித்து உங்க துப்பறிவை செலுத்துங்க..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.