எங்களுக்கு, விஜய் ஒரு சுண்டைக்காய்.! - அர்ஜூன் சம்பத் காட்டம்..

By 
arjun6

இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஜோசப் விஜய் அவர்கள் ஒரு வாரத்தில் இவ்வளவு முரண்பாடுகள் ஏன் இந்த மாற்றம் பல செய்திகள் காதில் விழுகிறது. நான் போன வாரமே சொன்னேன் நீங்கள் அரசியல் கட்சி தொடங்கி விட்டீர்கள். இனி அரசியல் செய்ய வேண்டும். உங்கள் சித்தாந்தம் கொள்கை தெரிந்தால், உங்களை அரசியல் கட்சிகள் எதிர்க்க தொடங்கும்.

திமுகவும், இமகவும் உங்களை கடுமையாக எதிர்க்கும். அந்த அரசியலை எதிர்த்து நீங்கள் களத்தில் நிற்க முடியுமா என்று சொன்னேன். ஒரு வாரத்தில் ஜோசப் விஜய் அவர்களின் நடவடிக்கைகளின் மாற்றங்கள் முரண்பாடுகள், பார்த்தால் வெகு விரைவில் ஜோசப் விஜய் அவர்களின் தவெக மூடு விழா நடைபெறும் என நினைக்கிறோம்.

நாங்க அரசியலில் எம் ஜி ஆர் அவர்களை பார்த்து விட்டோம், அம்மையார் ஜெயலலிதா அவர்களை பார்த்து விட்டோம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பார்த்து விட்டோம்! நவரச நடிகர் டி. ராஜேந்தர் அவர்களை பார்த்து விட்டோம்! இயக்குனர் பாக்யராஜ் அவர்களை பார்த்து விட்டோம்! கேப்டன் விஜயகாந்த் அவர்களை பார்த்து விட்டோம்! 

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை பார்த்து விட்டோம்! இதோ தொடங்க போகிறேன் இப்போ தொடங்குகிறேன் என்று சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்த்து விட்டோம்! இவ்வளவு பேரை பார்த்த எங்களுக்கு நீங்கள் எல்லாம் சுண்டைக்காய். அரசியல் என்றால் விளையாட்டாக போச்சு! 

அதிலும், முதலமைச்சர் என்ற சொல் உங்களுக்கு எல்லாம் நகைச்சுவையாக இருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது. அதற்கு போராட வேண்டும். சிறை செல்ல வேண்டும். வந்தவுடன் மக்கள் முதலமைச்சர் பதவியை தூக்கி கொடுக்க மாட்டாங்க. இனி தமிழகத்தில் எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணம் வரவே கூடாது.

கமலஹாசனின் மக்கள் நீதி மையம் வரிசையில், ஜோசப் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாறப்போகிறது திமுகவின் ஊதுகுழலாக தமிழக வெற்றி கழகம் உருவாகிவிட்டது. வெகுவிரைவில் திமுகவின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் மாறுவார். அப்பொழுதுதான் அவருடைய கோட் படம் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால், விஜய்க்கு பலவித நிர்பந்தங்களை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தும்.

இப்பொழுதே அத்தகைய நிர்பந்தங்களை ஏற்படுத்த துவங்கி விட்டார்கள். எனவே தான் ஜோசப் விஜயின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. ஜோசப் விஜய் நம்பி தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள ஜோசப் விஜய் ரசிகர்கள் ஏமாந்து விட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story