'மன்னிப்பு-மறுவாழ்வு செல்லப்பாவுக்கு ..' : ஓபிஎஸ் தரப்பு செம விளாசல்..

By 
sory2

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

எடப்பாடியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியில் சேருவதற்கு ஓ.பி.எஸ்ஸுக்கும் வைத்தியலிங்கத்துக்கும் நல்ல வாய்ப்பு என்கிறார் ராஜன் செல்லப்பா..

அனுபவம் பேசுகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்து விட்டு எஸ்.டி.எஸ்ஸோடு நமது கழகத்துக்கும்..புரட்சித்தலைவி அம்மாவுக்கு எதிராக போட்டி அண்ணா திமுக வுக்கும் போய் வந்த ராஜன் செல்லப்பா மன்னிப்பு கடிதங்களாலே முன்னுக்கு வந்தவர் என்பதை நாடறியும்.

அதுமட்டுமல்ல, எப்போதுமே மன்னிப்பு கடிதங்களை எழுதி தேதி போடாமல் கைவசம் ஸ்டாக் வைத்திருப்பவர் செல்லப்பா என்பதை மதுரை மக்கள் அறிவார்கள்.

ஆனால், ஓ.பி.எஸ்ஸோ வைத்தியலிங்கமோ ஏற்றுக்கொண்ட தலைமைக்கு துரோகமும் செய்ததில்லை, அதனால், மன்னிப்பு கடிதங்களை யாரிடமும் கொடுத்து மறுவாழ்வும் பெற்றதில்லை..

ஆக..புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரிடமே மன்னிப்பு கடிதம் கொடுத்திடாத அரசியலை முன்னெடுத்தவர்கள்.

எடப்பாடி என்கிற குத்தகைபார்ட்டியிடம் கூமுட்டை டகால்டியிடம் வளைந்து குனிந்து வாழ வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. வேண்டுமானால், அப்படி எடப்பாடியிடம் அண்டிப் பிழைக்க வேண்டிய வாய்ப்புகளை ராஜன் செல்லப்பாவும் அவரது மைந்தருமே பயன்படுத்திக்கொள்ளட்டும்.

அப்படிப்பட்ட கேவலமான பிழைப்பு பெரிய குளத்து பெரிய மனத்தாருக்கும் அவசியமில்லை. அதுபோல நிதிக்கு மயங்காத நீதிமானாகிய சோழ மண்டல தளபதிக்கும் தேவையில்லை.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story