முதல்வர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்

Pa Chidambaram Wishes to MK Stalin

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் முதல் அமைச்சர் ப சிதம்பரம்.

Pa Chidambaram Wishes to MK Stalin : தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தலை தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஆற்றிவரும் ஸ்டாலின் நேற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நரேந்திர மோடியை சந்தித்து 22 கோரிக்கைகளை முன்வைத்தார். 

அவை அனைத்தும் நியாயமான கோரிக்கைகளாக இருப்பதாக பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில் பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களிடம் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை மரியாதையாக ஆனால் உறுதியாக முன் வைத்த முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 

Share this story