அரசியல் மற்றும் சினிமாவுக்கு ஏற்றமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி : பி.சி.அன்பழகன் பெருமிதம்..

By 
pca11

'அரசியல் மற்றும் திரைப்பயணத்திற்கு என்றும் ஏறுமுகமாய் இருப்பவர் முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள்' என நாஞ்சில் பி.சி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு :

'அரசியலும், சினிமாவும் திராவிட முகத்துக்கு இரு கண்கள்' என்பது வரலாற்றுச் சுவடுகளாய் தொடர்வது  தெரிந்ததே.! இந்நிலையில், முன்னதாக.. காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற திரைப்படங்களை இயக்கியவர் பி.சி. அன்பழகன். 

இவர், தற்போது எழில் இயக்கும் தேசிங்குராஜா-2 திரைப்படத்தில், தென் மாவட்ட பாஷையில் தெறிக்க விடும் அரசியல்வாதியாக நடித்து புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர் இராஜகுமாரன் இயக்கும் 'நீ வருவாய் என' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகராக பங்கேற்று இருக்கிறார்.

இந்நிலையில், அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் கோவிந்தம்பாளையம் இல்லத்தில், நாஞ்சில் பி.சி.அன்பழகன், இராஜகுமாரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாய் சந்தித்துள்ளனர். இது குறித்து, நாஞ்சில் பி.சி.அன்பழகன் தெரிவித்ததாவது :

'சினிமாவுக்கு அப்பாற்பட்டு மிகவும் நல்ல நண்பர்களாக.. திரு. தங்கமணி அவர்களுடன் பயணிக்கிறேன். அரசியல் மற்றும் திரைப்படத்திற்கும் எனக்கு மிகவும் ஏற்றமாக என்றும் இருப்பவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்த உத்தரவுப்படி, 

தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரான எனக்கு.. நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில், முதன் முதலாக உரைவீச்சு நிகழ்த்துவதற்கு அழைப்பு விடுத்தவர் திரு. தங்கமணி அவர்கள். அதே நட்பு பசுமை மாறாமல் இன்றும் தொடர்கிறது. அவ்வகையில், அவரை சந்தித்துப் பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சி' என்றார் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

Share this story