இலவச தடுப்பூசி திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By 
Free vaccination program Chief Stalin started

இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவி மூலம், தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 10 மணியளவில் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

ஆனந்த பவன் :

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அடையாறு ஆனந்த பவன் உணவகத்தின் சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து, இந்த இலவச தடுப்பூசி போடும் திட்டம் காவேரி ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நாளை முதல் :

சென்னையில், தனியார் ஆஸ்பத்திரியில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதுபோல் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் நாளை முதல் விரிவுப்படுத்தப்படுகிறது.

இதன்மூலம், எத்தனை பேருக்கு இலவசமாக தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும் என்ற விவரம் ஒவ்வொரு தனியார் மருத்துவமனை வளாகத்திலும் வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

Share this story