உலக மக்களுக்கு வலிமை கொடுக்கிறது, காந்தியின் கொள்கைகள் : பிரதமர் மோடி

By 
Gives strength to the people of the world, Gandhi's principles Prime Minister Modi

தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி, டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பஜனை பாடல்கள் :

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

பிறந்த நாளையொட்டி மகாத்மா காந்தியின் பஜனை பாடல்கள் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.

உறுதிமொழி :

மகாத்மா காந்தி பிறந்தநாளை யொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், “மகாத்மா காந்தியின் போராட்டங்கள், தியாகங்களை இந்தியர்கள் அனைவரும் நினைவு கூரும் நாளாகும். 
அவருடைய போதனைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

காந்தியின் கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வலிமை கொடுக்கிறது :

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், 'தேச தந்தையின் பிறந்தநாளில், நான் தலைவணங்குகிறேன். 

அவருடைய வாழ்க்கை, தத்துவங்கள், இந்திய மக்களின் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகத்தை ஏற்படுகிறது. 

அவருடைய கொள்கைகள், உலக அளவில் பல லட்சம் மக்களுக்கு வலிமை கொடுக்கிறது' என்று கூறியுள்ளார்.

Share this story