போதை மருந்து கடத்தல் வழக்கில், இறைவன் பார்த்துக்கொள்வான்: வழக்கறிஞரிடம் வசனம் பேசிய ஜாபர் சாதிக்..

By 
jafer2

போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை, அவரது வழக்கறிஞர் சந்தித்த போது இறைவன் பார்த்துக் கொள்வான் என்று வசனம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் போதை பொருள் கடத்தியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஜாபர் சாதிக் என்று போதை பிரிவு கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதனை அடுத்து, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில், ஜாபர் சாதிக்கை அவரது வழக்கறிஞர் சந்தித்ததாகவும் அப்போது இறைவன் பார்த்துக்கொள்வான் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் போதை பிரிவு தடுப்பு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கை சந்தித்து பேசியதாகவும் அவர்தான் இந்த வழக்கை எடுத்து வாதிட போவதாகவும் கூறப்படுகிறது.
 

Share this story