வெள்ளத்தால் தவிக்கும் மக்களுக்கு, உதவுங்கள், அதுதான் எனக்கு பிறந்த நாள் பரிசு : கமல்

Help people who are suffering from floods, that is my birthday gift Kamal

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், தனது 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 

இதை முன்னிட்டு, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் விடாமல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலையிலும் நீடித்ததால், ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

இதனால், பல இடங்களில் கறுப்பு நிறத்துடன் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் இதை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர். வாகன போக்குவரத்தும் பல இடங்களில் ஸ்தம்பித்தது. 

தொடர்ந்து மழைபெய்த வண்ணம் இருந்ததால், ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சென்னை நகரமே இன்று காலை ஸ்தம்பித்தது.

இந்நிலையில், மநீம உறவுகளே வெள்ளத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள்; அதுதான் எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
*

Share this story