பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்தில்.?

By 
hrain8

கனமழை காரணமாக நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிக கன மழை பெய்து வருவதை அடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

 இந்த நிலையில் கன மழை காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்னும் ஒரு சில மாவட்டங்களுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this story