மன்மோகன் சிங் ஆரோக்கியமாய் வாழ பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

I pray for Manmohan Singh to live a healthy life Prime Minister Modi

மன்மோகன் சிங்குடன் பிரதமர் மோடி
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று, மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 89) நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் அடைந்தது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Share this story