வடிவேலுவை போலவே சீமானை பார்க்கிறேன் : கே.எஸ்.அழகிரி கிண்டல்

By 
meem

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து காங்கிரசை விமர்சித்திருந்தார்.

தமிழகத்துக்குரிய நதி நீரை காவிரியில் இருந்து பங்கீடு செய்யாவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதி பங்கீடு இல்லை என்று முதலமைச்சர் கூறுவாரா? என்று சீமான் கேள்வி எழுப்பி இருந்தார். ஜெயலலிதாவாக இருந்தால் அது போன்று துணிச்சலான முடிவை எடுத்திருப்பார். கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றினால் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன் என்று சீமான் தெரிவித்து இருந்தார்.

சீமானின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது:-

இந்த விவகாரத்தில் நான் அதிகமாக கருத்து கூற விரும்பவில்லை. ஒரு வரியில் பதில் சொன்னாலே போதும் என்று நினைக்கிறேன். அப்படி சொல்ல வேண்டும் என்றால் சீமானை காமெடியனாகவே பார்க்கிறேன்.

ஒரு படத்தில் வடிவேலு 'நானும் ரவுடி தான்-நானும் ரவுடிதான்' என்று கூறுவதை பார்த்திருப்போம். அப்படித்தான் நான் சீமானை பார்க்கிறேன். மற்றபடி அவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

Share this story