தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

I will work for the betterment of the people of Tamil Nadu Governor RN Ravi's speech

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பின்பு அவர் கவர்னர் மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

வணக்கம் என்று தமிழில் கூறினார். பின்னர், கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது :

அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ளது பெருமை அளிக்கிறது. தமிழக கலாச்சாரம் உலகில் மிகவும் பழமையான கலாச்சாரமாகும். இங்கு கவர்னராக செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் இப்போதுதான் தமிழக கவர்னராக பொறுப்பேற்று இருக்கிறேன். பழமை வாய்ந்த தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வேன்.

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக, அரசியலமைப்பு சட்டத்தின்படி பாடுபடுவேன். தமிழக அரசுக்கு என் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். 

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவேன்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. கவர்னர் பதவி என்பது, விதி விலக்குக்கு உட்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன்.

தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தி உள்ளது. 

தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு, சில காலம் அவகாசம் தேவை.

மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்துக்கு வர வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை பெற்று தருவேன்' என்றார்.

Share this story