பாஜக.வுடன் கூட்டணி உண்டா? இல்லையா? : அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By 
e43

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வும் அங்கம் வகித்தது. கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உரசல் நிலவி வந்தது. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.

அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே நிலவி வந்த உறவு முறிந்தது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  

Share this story