புரட்சியை ஏற்படுத்தியுள்ளது : நிர்மலா சீதாராமன் தகவல்

By 
ns1

பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்படும் என 2014-ம் ஆண்டு தனது சுதந்திர தின விழா உரையின்போது குறிப்பிட்டிருந்தார். அதன்படி நாட்டின் உள்ள கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டில் வங்கி கணக்கு தொடங்கலாம்.

ஆதார் கார்டு தவிர்த்து மற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. அதன்படி 2015-ல் இருந்து வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் வங்கி சேவை கணக்கு, பணம் பரிமாற்றம், கடன் பெறுதல், டெபாசிட் செய்தல் என நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு 2015-ல் 14.72 கோடியாக இருந்த நிலையில், 2023 ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 50.09 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 55.5 சதவீதம் பெண்கள் கணக்கு தொடங்கியுள்ளனர். 67 சதவீதம் கிராமம் மற்றும் நகரத்தின் புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டதாகும்.

2015-ல் 15,670 கோடி ரூபாயாக இருந்த டெபாசிட், 2023 ஆகஸ்டில் 2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2015 மார்ச் மாதம் சராசரி டெபாசிட் 1065 ஆக இருந்த நிலையில், தற்போது 4063 ஆக அதிகரித்துள்ளது. 34 கோடி பேருக்கு ரூபே (Rupay) கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான எந்த கட்டணமும் பெறப்படவில்லை.

அவைகள் 2 லட்சம் ரூபாய் விபத்து இன்சூரன்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. 2023-ல் ஆகஸ்டில் 58 சதவீத அக்கவுண்ட்டில் 8 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this story