ஹீரோ அடிவாங்கிக்கொண்டே இருப்பதைப்போல் தான் இருக்கும், கடைசியில் ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவார்: வைத்தியலிங்கம்

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு முறையீடு செய்துள்ள சூழலில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வந்தவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அதிமுக கொடிகளை கார்களில் பயன்படுத்தவில்லை. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வத்திற் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்த போது, நீதிமன்றத்தில் தங்கள் அணிக்கு தொடரந்து பின்னடைவாக இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு முறையீடு செய்துள்ள சூழலில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வந்தவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அதிமுக கொடிகளை கார்களில் பயன்படுத்தவில்லை. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வத்திற் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்த்தித போது, நீதிமன்றத்தில் தங்கள் அணிக்கு தொடரந்து பின்னடைவாக இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்.
ஹீரோ வில்லனிடம் அடிவாங்கிக்கொண்டே இருப்பார். கடைசியில் ஹீரோ ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவார். அதை போல கடைசியில் ஓ.பி.எஸ் வீழ்த்துவார் என பதிலளித்தார். தாங்கள் கட்சி வேட்டி கட்டுவதை யாரும் தடுக்க முடியாது எனவும், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கார்களில் கொடி ஏற்றவில்லை என கூறினார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடாக உள்ளதாக கூறிய அவர்,
தேர்தல் நெருங்கும் போது ஓ.பி.எஸ் சசிகலாவை சந்திப்பார் என தெரிவித்தார். அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி, நீதிமன்ற உத்தரவால் மக்கள் மன்றத்தில் ஓ.பி.எஸ்க்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது. அது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியாக மாறும் என தெரிவித்தார்.
ஹீரோ வில்லனிடம் அடிவாங்கிக்கொண்டே இருப்பார். கடைசியில் ஹீரோ ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவார். அதை போல கடைசியில் ஓ.பி.எஸ் வீழ்த்துவார் என பதிலளித்தார். தாங்கள் கட்சி வேட்டி கட்டுவதை யாரும் தடுக்க முடியாது எனவும், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கார்களில் கொடி ஏற்றவில்லை என கூறினார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைபாடாக உள்ளதாக கூறிய அவர்,