இப்படி பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு: பிரேமலதா விஜயகாந்த்..

By 
vijayakanth3

நடிகர் விஜயகாந்த்திற்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பினார்.

இந்த நிலையில், இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் உடல் தளர்ந்த  நிலையில், நீண்ட காலம் கழித்து தொண்டர்கள் முன் தோன்றினார். மேலும் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please
பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே  கஷ்டமா இருக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this story