கமல்ஹாசன் தேர்தலில் மீண்டும் போட்டி : எந்த தொகுதியில் தெரியுமா?

By 
kovai6

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த ஆலோசனை  கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறேன். கோவையில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் இங்கு போட்டியிட உள்ளேன். கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.

விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது; மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா? தேர்தலில் கோவைக்கு வாருங்கள் என தொண்டர்கள் அழைக்கிறார்கள்.கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40,000 பேரை தயார் செய்ய வேண்டும். எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து, மீண்டும் கோவையில் நிற்கிறேன்.

சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக இவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியோ பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும்.

இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால், அந்த வேலை எங்களுக்கு வேண்டாம். அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம் இவ்வாறு அவர் பேசினார். 

Share this story