ரஜினியின் அரசியல் முடிவு குறித்து, லதா ரஜினிகாந்த் கருத்து..

By 
lrlr

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என முடிவெடுத்தது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. ரஜினிகாந்த நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த மீடியா ஒன் நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீது இந்த வழக்கை தொடர்ந்திருந்தது. மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையில் மூன்று பிரிவுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அந்த 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன.

எஞ்சியுள்ள ஒரு பிரிவின் கீழ் உள்ள வழக்கை மட்டும் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் ஜனவரி 6-ந் தேதிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் எச்சரித்த நிலையில், நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த், இந்த வழக்கில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி லதா ரஜினிகாந்துக்கு நிபந்தனை உடன் முன் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் லதா ரஜினிகாந்த் பதிலளித்தார். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியது பற்றி லதா ரஜினிகாந்த் அளித்த பதில் பற்றி தற்போது பார்க்கலாம்.

அதன்படி அவர் கூறியதாவது : “அவர் அரசியலுக்கு வராதது எனக்கு ரொம்ப வருத்தம் தான். ஏனெனில் நான் அவரை ஒரு தலைவராக தான் பார்த்தேன். அந்த ஒரு வருத்தம் தான். ஆனால் அவர் அரசியலுக்கு வராததற்கு நேர்மையான சில காரணங்களும் இருந்தது. அதை நாம் மதிக்க வேண்டும் என கூறிய லதாவிடம் ரஜினி அரசியலுக்கு வரமுடியவில்லை என உங்களிடம் சொல்லி ஃபீல் பண்ணினாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதெல்லாம் பர்சனல் எனக்கூறினார் லதா ரஜினிகாந்த்.

Share this story