உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை.. தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்..

By 
Local elections AIADMK-BJP talks .. Appointment of Temujin officials .

தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந்தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 

அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர்.

* ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு, தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Share this story