உயர்வான ஆட்சியும், ஓரவஞ்சனையும்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
உயர்வான ஆட்சி :
* பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, அரிசி விலை உயர்வு, வீடு கட்ட அப்ரூவல் கட்டணம் உயர்வு,
மின் கட்டணம் உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்வு...
ஆக, இது தான் உயர்வான ஆட்சி என்பதாக்கும்.?
ஓரவஞ்சனை:
* 10.5 %ஒதுக்கீடு வழங்கி, தென்மாவட்ட மக்களுக்கு எடப்பாடி செய்த துரோகம் மட்டும்தான் வெளியில் தெரியும்.
ஆனால், விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, சேலம்,ஈரோடு என இரு மாவட்டத்திற்கு மட்டும் சுமார் ரூ2200 கோடி கடன் வழங்கி, அவற்றை தள்ளுபடியும் செய்தார் என்றால்..
நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ங்களுக்கு வழங்கிய கடனோ வெறும் ரூ1500 கோடி மட்டும்தான்.
இப்படி, எடப்பாடி செய்த ஓரவஞ்சனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.