தங்களது கூட்டணிக்கு துரோகக் கூட்டணின்னு பேரு வைக்கலாமே : பாஜகவுக்கு மருது அழகுராஜ் அறிவுறுத்தல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், அதிரடியாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
* மதம் கொண்டு மக்களை பார்ப்பவர்கள், தமிழகத்தை சாதி கொண்டு பார்க்கிறார்கள் என்றால்.. சாதி என்னும் கால் முளைத்த சதியின் வால் அறுக்க வேண்டியது கழகத் தொண்டர்களின் கடமை அன்றோ.
* எடப்பாடியின் மொத்த அபகரிப்புக்கும் பின்புலமாக நின்ற அண்ணாமலை, பா.ஜ.க. நடத்திய கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு காரணம்.. கருப்பு ஆடு தான் என்பதை மறைப்பதற்கு தானாம்.
விடுங்க அண்ணாமலை.. 2024 மே மாதம் உங்களுக்கு எல்லாத்தையும் புரியவச்சிப்புடுறோம். விநாசகாலே விபரீத புத்தி.
* பா.ஜ.க. வின் ஊழல் எதிர்ப்பு கொள்கை என்பது..ஊழல் குற்றமல்ல, அதனை எங்களுக்கு எதிரான இடத்தில் இருந்துகொண்டு செய்வதுதான் பெருங்குற்றமாகும்.
கொலை, கொள்ளை, ஊழல் இவற்றில் எதை செய்தாலும் எங்களோடு சேர்ந்துகொண்டு விட்டால்.. கொலை ஜீவகாருண்யம் ஆகும். ஊழல் புனிதச்செயலாகும்.. இதுவே பாரதீய ஜனதாவின் கொள்கை.
* நரி வலம் பாஞ்சா என்ன.. இடம் பாஞ்சா என்னங்கிற மாதிரி, பத்துத்தோல்வி தரைப்பாடிய பக்கத்துல வச்சா என்ன.. இல்லை கக்கத்துல வச்சா என்ன.
* கட்டிக்கப்போறோம்னு தெரிஞ்ச பெறகு, அந்த புள்ளய ஒழுக்கமில்லைன்னு ஊரெல்லாம் சொல்லப்புடாது. அது மாதிரி, மோடிக்கு பக்கத்துல உக்காரனும்னு முடிவு செஞ்ச பெறகு..
அப்புறம் ஏன் பொன்னையன் ஜெயக்குமாரு சிவி சண்முகம்னு ஆளுகள ஏவி விட்டு, பா.ஜ.க.வை அப்புடி காது கருகுற அளவுக்கு திட்டுனீங்க?
* சரத்பவாருக்கு துரோகம் பண்ணினவன், உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செஞ்சவன், ஓ.பி.எஸ்ஸுக்கு துரோகம் புரிந்தவன்னு..
இப்படி துரோகிகளை வைத்து தோரணம் கட்டுகிற பா.ஜ.க. தங்களது கூட்டணிக்கு துரோகக்கூட்டணின்னு பேரு வைக்கலாமே.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.