முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று எம்பிக்கள் கூட்டம் : முக்கிய தீர்மானம்..

MPs meeting today, chaired by Chief Minister Stalin Key resolution ..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என திமுக எம்.பி.க்.கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. 

இந்நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

இதில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என திமுக எம்.பி.க்.கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும், வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு திமுக எம்.பி.க்.கள் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
*

Share this story