அனுமதிக்க வேண்டும் : அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை..
 

By 
oppo4

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி குழுவினர் மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டுமென அமித்ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த முடிவும் உள்துறை தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

மேலும், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங்கை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உள்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்தன.
 

Share this story