தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

National Digital Health Plan Launched by Prime Minister Modi

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை, டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார். 

டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, உடல்நலம் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை, பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்த பின் பேசியதாவது :

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில், பெரும் பங்கு வகிக்கும்.  

இன்று, நாட்டின் அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுவது அல்லது சிகிச்சை அளிப்பது, அவர்களின் முயற்சிகள் தேசத்திற்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது.  

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது உதவியது' என்றார்.

Share this story