ஒன்றும் ஒன்றும் பூஜ்யமாகவும் மாறும் : வானதி சீனிவாசன் விமர்சனம்

By 
vanathi2

எதிர்க்கட்சிகளின் கூட்டம் பற்றி பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்துள்ள விமர்சனம்தான் இது.

தேர்தல் அரசியல் என்பது வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல. அது ரசாயனம். அதாவது மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. தேர்தல் அரசியலில் ஒன்றும் ஒன்றும் இரண்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. பூஜ்யமாகவும் மாறும்.

எனவே 16 கட்சி கூட்டணி அல்ல 32 கட்சிகளாக இருந்தாலும் எந்த பலனும் கிடைக்காது. பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா? கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாபில் காங்கிரசுக்கு சீட் ஒதுக்குவாரா?

மராட்டியத்தில் பிளவுபட்ட உத்தவ் தாக்கரே கட்சிக்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எத்தனை தொகுதிகள் கொடுக்கும்? கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? இப்படி பதில் கண்டுபிடிக்க முடியாத பல கேள்விகள் இருக்கும் போது 16 கட்சிகள் இல்லை 36 கட்சிகள் 106 நாட்கள் கூடி பேசினாலும் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்' என்றார்.

Share this story