42 பேருக்கு என்எஸ்எஸ் விருதுகள் : ஜனாதிபதி இன்று வழங்கினார்

By 
NSS Awards for 42 Presented by the President today

நாட்டு நலப்பணித் திட்டத்தை (என்எஸ்எஸ்) மேலும் ஊக்குவிக்கும் விதத்தில், 

சிறப்பான சமூக சேவை புரிந்த பல்கலைக்கழகம்/பன்னிரண்டாம் வகுப்பு குழுக்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் மற்றும் திட்ட அலுவலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறது.

அவ்வகையில், 2019-20ஆம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து காணொலி மூலம் 2019-20-ம் வருடத்திற்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை வழங்கினார்.

பல்கலைக்கழகம்/பன்னிரண்டாம் வகுப்பு குழுக்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் மற்றும் திட்ட அலுவலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் 42 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் நிசித் பிரமாணிக் ஆகியோர் டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Share this story