மக்கள் செல்வாக்கு-சிறந்த முதலமைச்சர் : இந்தியாவில் மு.க.ஸ்டாலின் முதலிடம்

By 
People's Influence-Best Chief Minister MK Stalin first in India

சி.என். ஒ.எஸ். ஒபினியோம் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில், இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்று உள்ளார்.

இந்தியாவில் முதலமைச்சர்களின் செல்வாக்கு குறித்து ‘சி.என்.ஒ.எஸ். ஒபினியோம்” என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் நாட்டில் சிறந்த முதலமைச்சர்களாக 5 முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்திய அமைப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக திகழ்கிறார்.

இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67 ஆகும். அவருடைய மாநிலத்தில் (தமிழ்நாட்டில்) கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

12 சதவீதம் பேர் அவருடைய செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறி உள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பில் திருப்தி அடைந்தவர்களின் சதவீதத்தில் திருப்தி இல்லை என்று கூறுபவர்களைக் கழித்து, மீதமுள்ளவர்களே நிகர ஆதரவாளர்களாகக் கணக்கிடப்படுகிறது.

அதன்படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகரப்புள்ளிகள் 67 பெற்று, இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக முதலிடம் பெற்று உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதலமைச்சர்களில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 3-வது இடம் பெற்றுள்ளார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 4-வது இடத்திலும், அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.

இவ்வாறு சி.என்.ஓ.எஸ். ஒபினியோம் அமைப்பு தெரிவித்துள்ளது.
*

Share this story