6 மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை..

By 
PM Modi consults with 6 state chief ministers

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா முதலமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தமிழகம் உள்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தளர்வுகளால் கொரோனா மேலும் அதிகரிக்காமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

Share this story