போலீஸ் அருங்காட்சியகம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By 
Police Museum Opened by Chief Stalin

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா எழும்பூரில் இன்று நடைபெற்றது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். 

பின்னர், அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். அருங்காட்சியகத்தில் காவல் துறையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில், பழங்காலப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், போலீசார் பயன்படுத்திய பழமையான உடைகள் முதல் ஆயுதங்கள் வரை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. அவைகளை மு.க.ஸ்டாலின் பார்த்து வியந்தார்.

முன்னதாக, விழாவுக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share this story