பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலா? அல்லது வாரிசு அரசியலின் காட்சியா? குஷ்பு விமர்சனம்

By 
mm0

திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலை வகித்தார்.

இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆகியோர் பங்கேற்றனர்.  

இதுகுறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலா அல்லது வாரிசு அரசியலின் காட்சியா?? இந்திரா காந்தியின் மருமகள் & ராஜீவ் காந்தியின் மனைவி, முகமது முப்தி சயீத் சாப்பின் மகள், ராஜீவ் காந்தியின் மகள், சரத் பவாரின் மகள், அகிலேஷ் யாதவின் மனைவி, டாக்டர் சந்தோஷ் மோகன் தேவ்யின் மகள்,  கலைஞரின் மகள்.

டாக்டர் கலைஞரின் மகன் தலைமையில் அரசியல் குடும்பக் குறி கொண்ட ஒவ்வொரு பெண்ணும் முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள். இந்தியா கூட்டணியில் வெற்றி பெற்ற எந்தப் பெண்ணும் தன் தந்தையோ, கணவனோ, அரசியல் குடும்பப் பெயரோ இல்லாமல் தானே உருவானார்களா? வாரிசு ஆட்சியை மட்டுமே நம்புபவர்கள் என்று நாங்கள் சொல்லியதை சரியென திமுக நிரூபித்துள்ளது' என குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். 

Share this story