அரசியல் பிழைகளை அகற்றித் திருத்துவதே முதலமைச்சரது தரத்துக்கு அழகு : ஓபிஎஸ் தரப்பு அறிவுறுத்தல் 

By 
lee1

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :

குடித்த நாக்கு தடித்த வார்த்தை பேசும் என்பதற்கு சமகால சாட்சியாக திகழும் திண்டுக்கல் லியோனி.. போகும் இடமெல்லாம் செருப்படி வாங்கி வருகிற உறுப்படி என்பதை உலகமே அறியும்.

இதற்கு..மலேசியா வரை சென்று அவர்  வாங்கி வந்த கடந்த கால வசவுகளே சாட்சி.

இப்போது, உள்நாட்டிலும் உதை வாங்க வேண்டும் என்கிற ஆசையோடு, அம்மாவை பற்றி அவர் அத்துமீறி விமர்த்து அலைகிறார்.

மறைந்துவிட்ட எங்கள் தலைவர்களை தரம் தாழ்த்தி நான்காம் தரத்தில் திமுக வினர் விமர்சிக்கத் தொடங்கினால்.. உங்கள் தலைவர்களை நாற்பதாம் தரத்தில் நாறடிப்பதற்கு அண்ணா திமுக வில் ஒன்றும் ஆள் பஞ்சம் கிடையாது.

"கருவின் குற்றமே" என அன்றைய நாஞ்சில் மனோகரன் பேசியது தொடங்கி.. அதனை முகப்பில் அச்சிட்டு வழிமொழிந்த  தினகரன் கே.பி.கந்தசாமி வரையிலான பழைய பதிவுகளை தோண்டி எடுத்து ஏகடியம் பேசுவதற்கு எங்களுக்கு கணநொடியும் ஆகாது.

மேலும்...லியோனி குறிப்பிட்டிருக்கும்   விமர்சனத்தை அன்று பேசியவரே அதிமுக வுக்கு வந்த பிறகு கலைஞர் குறித்து பேசிய  பேச்சுகளை எல்லாம் குறிப்பு எடுத்துப் போட்டு குரைப்பதற்கும் எங்களுக்கு வெகுநேரம் பிடிக்காது.

எனவே..வருங்கால மாணவச் சமூகத்தை பண்படுத்தும் பாடநூல் நிறுவனத்தை வழிநடத்துகிற புனித மிக்க பொறுப்பில் அமர்ந்துகொண்டு, மனிதச் சாணத்தை நாக்கில் பேச்சுக்களாக தூக்கி அலையும் லியோனி போன்ற அரசியல் பிழைகளை அகற்றித் திருத்துவதே தமிழ் நாட்டு முதலமைச்சரது தரத்துக்கு அழகாகும்.

அதைச் செய்யாது போனால், தி.மு.க. தலைவர்களின் மீதான தரம் குறைந்த பதிவுகளின் அத்தியாயங்கள் இங்கேயும் ஆரம்பித்து விடும்.

எச்சரிக்கை.. எச்சரிக்கை.. இது இறுதி எச்சரிக்கை.. லட்சுமண ரேகையை மீறாதே..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story