ரூ.1,597.59 கோடியில் திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By 
Rs 1,597.59 crore projects Chief Minister MK Stalin initiated

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ரூ.1,597.59 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ரூ.1,59, கோடி மதிப்பிலான திட்டங்களை சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் 

பின்னர், வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

* தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில், அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

வேட்புமனு தாக்கல் செய்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இரண்டு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story