விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.19,500 கோடி பரிமாற்றம் : பிரதமர் மோடி விடுவிப்பு

By 
Rs 19,500 crore transferred to farmers' bank accounts PM Modi released

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 9-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். 

இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி உதவியானது, விவசாய குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் 9- வது தவணை நிதியை, பிரதமர் மோடி இன்று காணொலிக்காட்சி வாயிலாக விடுவித்தார். 

இதன்படி 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு, சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். 

இந்த விழாவில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டார்.

Share this story