குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் : கே.என்.நேரு

Rs.1,000 per month for housewives to be paid soon KN Nehru

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு, குடும்பத் தலைவிகள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து, திமுக ஆட்சியை பிடித்த நிலையில், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதி நெருக்கடி காரணமாக, செயல்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திமுக தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக , பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக தேர்தலுக்காக கொடுத்த வெற்று வாக்குறுதி இது என்றும் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசிய அமைச்சர் நேரு, 'அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா? தற்போது நடைபெற்றதை விட நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது' என்றார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் நடந்தது.

பின்னர், ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பிலும், தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வருடமும், இந்த வருடமும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், 17 ஆண்டு களுக்கு பின்னர் மத்திய தொல்லியல்துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.

அகழாய்வுப் பணியை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளனர். அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது.

பின்னர், கனிமொழி எம்.பி. கூறியதாவது :

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது. 

ஆனால், ஆய்வு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 17 கோடி போதுமானதாக இருக்காது. 

எனவே, மத்திய அரசு இந்த தொகையை உயர்த்தும் என நம்புவோம்' என்றார்.

Share this story