தமிழகம் முழுவதும், 23-ந்தேதி சசிகலா சுற்றுப்பயணம்..

By 
Sasikala tour across Tamil Nadu on the 23rd ..

கடந்த தேர்தலின்போது, அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த சசிகலா, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். 

இதற்காக, அவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்களுடன் போனில் பேசி வருகிறார்.

அவர் தொண்டர்களிடம் பேசிய 150-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளியாகி உள்ளன. 

ஜெயலலிதா சமாதி :

இந்நிலையில், சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 23-ந் தேதி அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சசிகலா வருகிற 23-ந் தேதி ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறார். அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு, தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

அனுமதி :

ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா தனியாக செல்ல, போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால், 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும்.

எனவே, போலீசாரிடம் அனுமதி பெறும் திட்டமும் அவரிடம் இருப்பதாக தெரிகிறது. போலீஸ் அனுமதி கிடைத்ததும், சசிகலா தனது சுற்றுப் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனு :

இது தொடர்பாக, சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது :

ஊரடங்கில் என்னென்ன தளர்வு இருக்கிறது என்று எதிர்பார்க்கிறோம். அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தால், சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பார். 

ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வதற்கும், அவர் சுற்றுப்பயணம் செய்வதற்கும் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளோம்' என்றார்.
*

Share this story