தெருநாய் தொல்லை தாங்க முடியலை : பிரதமர் மோடிக்கு, தமிழக எம்.பி. கடிதம்..
Updated: Mar 16, 2023, 01:37 IST

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தெருநாய்களின் தொல்லை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தெருநாய்கள் கடித்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ள அவர், இதில் உடனடி கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுவதை சுட்டிக்காட்டி, கருத்தடை பணிகள் தோல்வி அடைந்தது போலத் தெரிவதாகவும், எனவே மத்திய அரசு தெருநாய்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்து தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.