ஆட்டம் போடும் அமானுஷ்ய சக்தி : ஓபிஎஸ் தரப்பு தகவல்கள்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு :
* முதல் நடுவர், இரண்டாம் நடுவர் ஆகியோரது தவறான தீர்ப்புகளை தேர்டு (Third) அம்பயர் எனப்படும் மூன்றாம் நடுவர் ஆதாரப்படுத்தி மாற்றி அறிவிப்பது கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அரசியலிலும் உண்டு.
ஒருவேளை, அந்த மூன்றாம் நடுவர் வேலையை தேர்தல் ஆணையமும் சரியாக செய்யவில்லை என்றால்.. அதனை மக்கள் மன்றம் ஏற்றுக்கொள்ளும். அப்படி மக்கள் மன்றத்தால் எழுதப்படும் தீர்ப்பு என்பது கடுகளவும் பிசகாத தர்மத்தை நிலைநாட்டும்.
* வசதி படைத்தவர்களுக்கு ஆலயங்களில் கிடைக்கும் சிறப்பு தரிசனங்கள் போல், வேண்டியதை வேண்டுகிற வேகத்தில் எடப்பாடிக்கு பெற்றுக் கொடுக்கிறது ஒரு அமானுஷ்ய சக்தி என்றால்..
கொலை கொள்ளை விவகாரங்கள், சம்பந்தி தொடர்புடைய டெண்டர் முறைகேடு, சகாக்கள் மீதான நிலக்கரி காணாமல் போன விவகாரம், ஸ்மார்ட் சிட்டி ஊழல், கொரானா கொள்ளை உள்ளிட்ட எடப்பாடிக்கு எதிரான எல்லாமும் கோமாவில் அசைவற்று கிடக்கிறது.
மக்களிடையே எழுந்து நிற்கும் இந்த ஒப்பீட்டுக்கு, உரிய விடை விரைவில் பொதுவுக்கு வரும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.