செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் அனுமதி..

By 
sb1

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனைவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசரித்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடையில்லை என்றும், கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


 

Share this story