தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்-விஜயகாந்த் வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
டாஸ்மாக் கடைகளில் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக தமிழ்நாடு மதுவிலக்கு துறை அமைச்சர் தற்போது கூறியிருக்கிறார். அதே சமயத்தில், மது பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கூறி இருக்கிறார்.
மதுவிலக்குக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையங்களை அமைக்கவும், மதுக்கடைகளின் எண்ணிக்கையினை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கினை அமல்படுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு தனது ஆண் நண்பருடன் சென்ற 17 வயது சிறுமியிடம், மது போதையில் இருந்த உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் பிரசாத், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன் ஆகிய 4 பேர் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினரே, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் 4 காவலர்களும் பணியில் இருந்தபோது குடிபோதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த 4 காவலர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.